புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா

புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-03-17 03:10 GMT
காரமடை,

கோவை மாவட்டம் காரமடை அருகே புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மட்டும் பள்ளி செயல்பட்டு வருகிறது.  தினமும் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. 

இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் நாளை (வியாழக்கிழமை) 3 நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்