ஆட்டோவில் தவறவிட்ட 2½ பவுன் தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

ஆட்டோவில் தவறவிட்ட 2½ பவுன் தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-03-17 03:08 GMT
கோவை,

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவர். இவர் மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையினராகவும் பணியாற்றி வருகிறார்.  இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்லும் இடங்களில் இறக்கிவிட்டுள்ளார். 

பின்னர் அவர் ஆட்டோவுக்குள் பார்த்த போது ஆட்டோவின் சீட்டில் கிறிஸ்தவ டாலருடன் 2½ பவுன் தங்கச்சங்கிலி கிடந்தது. அதை எடுத்து துடியலூர் ஊர்க்காவல் படை அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.  விசாரணையில் அந்த தங்கச்சங்கிலி ஆட்டோவில் பயணம் செய்த செட்டிவீதியைச் சேர்ந்த ராணி பிரிசில்லா என்பவருக்கு சொந்தமானது எனத தெரியவந்தது. 

இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, அந்த தங்கச் சங்கிலியை ராணி பிரிசில்லாவிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அவர் ஊர்க்காவல் படையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் நற்செயலை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்