அனுசோனை கிராமத்தில் மினி லாரியில் கொண்டு சென்ற ரூ.1.23 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

அனுசோனை கிராமத்தில் மினி லாரியில் கொண்டு சென்ற ரூ.1.25 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-17 02:03 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனுசோனை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள்  சிவக்குமார், சுந்தர்ராஜ், வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 400 இருந்தது. இதுதொடர்பாக மினி லாரியில் வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பஷீர் (வயது 53) என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். 

அப்போது கெலமங்கலம் பி.சி.ஆர்.நர்சரி பார்மில் ரோஷ் பூ நாத்து வாங்க கொண்டு சென்றது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து மினி லாரியில் கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்