தேர்த்ல விதிமீறல்; தி.மு.க.வினர் 500 பேர் மீது வழக்கு
கடையநல்லூரில் தேர்தல் விதியை மீறியதாக தி.மு.க.வினர் 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அச்சன்புதூர்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த துரையை அக்கட்சியின் மாநில தலைமை திடீரென நீக்கிவிட்டு கடையநல்லூர் ஒன்றிய செயலாளராக இருந்த செல்லத்துரை என்பவரை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக அறிவித்தது. அவரை வரவேற்பதற்காக நேற்று முன்தினம் மாலை கடையநல்லூர் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரண்டு வந்து பட்டாசு வெடித்து வரவேற்ப அளித்தனர்.
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் முகைதீன் கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், தேர்தல் விதிமுறையை மீறியதாக தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை உள்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.