தென்காசியில் இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல்

தென்காசியில் இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2021-03-16 23:28 GMT
தென்காசி:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆலங்குளம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.சங்கீதா மனு தாக்கல் செய்தார். தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 3 தொகுதிகளிலும் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேரை சேர்த்து இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்