ஆலங்குளம் அருகே மினிலாரி மோதி முதியவர் சாவு
ஆலங்குளம் அருகே மினிலாரி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூரை சேர்ந்தவர் அப்பாத்துரை (வயது 60). இவர் நேற்று தனது மனைவி ரதியுடன் நெல்லை செல்வதற்காக கரும்பனூரில் இருந்து ஆலங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
ஆண்டிப்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டதில் அப்பாத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரதி லேசான காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.