தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேர் நிலைக்கு வந்தது
கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேர் நிலைக்கு வந்தது
தேவூர்:
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோரம் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 14-ந் தேதி கோவில் சன்னதி முன்பு இருந்து தேர் அலங்கரிக்கப்பட்டு தேர் நிலை பெயர்ந்து 3 நாட்களாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் கல்வடங்கம் கொட்டாயூர், பூமணியூர், நல்லங்கியூர், காவேரிபட்டி, வட்ராம்பாளையம், எடப்பாடி, தேவூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேரோட்டத்தின் 3-வது நாளான நேற்று மாலை கோவில் சன்னதி முன்பு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது. தேரோட்ட ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மகிபாலன், இரண்டாம் சாவி ஆய்வாளர் கல்பனாதத், செயலாளர் கோகிலா மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், பரம்பரை பூசாரிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.