நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
மத்திய அரசின் கொள்கை முடிவான பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவினை கண்டித்து வங்கி ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் வங்கி பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
நெல்லை மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குள்ள வங்கிகளில் பணியாளர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. வங்கிப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நில அளவை மற்றும் கனிம வளத்துறைக்கு பணம் கட்டுவதற்கு முடியாமல் ஏராளமான பொதுமக்கள் அவதிப்பட்டனர். காசோலை பண பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வங்கி ஊழியர்கள் தொடர்ந்து 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் செலுத்தவில்லை. இதனால் பல ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாமல் செயல்படாமல் கிடந்தன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.