இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.1½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.1½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.1½ லட்சம் பறிமுதல்
அப்போது பணத்துடன் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போது மாரிக்கனி என்பதும், வங்கியில் செலுத்துவதற்காக ரூ.1½ லட்சத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணம்
பின்னர் அந்த பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் மற்றும் உதவி அலுவலர் அன்னம்மாள் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
அப்ேபாது வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பால்துரை, வருவாய் ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி முருகன் கூறுகையில், உரிய ஆவணங்களை ஒப்படைத்தால் மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என கூறினார்.