விருதுநகர்,
மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 12-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் மல்லாங்கிணறை சேர்ந்த காளிமுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் மனு தாக்கல் செய்தார். அதேபோல அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக முத்துமாரியப்பன் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுவரை 27 பேர் 43 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்