விவசாய பணிகள் மும்முரம்
தளவாய்புரம் அருேக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருேக விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெற்பயிர் சாகுபடி
தளவாய்புரம் அருகே முகவூர் கிராமத்தில் கடந்த தை மாதம் பெய்த பலத்த மழையினால் இங்குள்ள பெரும்பாலான கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பி விட்டது.
இங்குள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் நெற்பயிரை பயிரிடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஐப்பசி மாதம் நடவு செய்த நெற்பயிரை தை மாதம் அறுவடை செய்தனர். தற்போது இந்த பகுதியில் இரண்டாவது மகசூல் செய்யும் பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பணிகள் மும்முரம்
இதற்காக தற்போது டிராக்டர் மூலம் நிலத்தை உழுது, பாத்தி கட்டி, நெல் விதைகளை தூவி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா. அதேபோல உரமிடுதல், நெல் நாற்று நடுதல் ஆகிய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.