சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சரக்கு ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சரக்கு ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜீயபுரம்,
சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூரை சேர்ந்தவர் சிவசூரியன்(வயது 24). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் டியூசன் சென்றுவிட்டு வந்த 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவசூரியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.