தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு

தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு

Update: 2021-03-16 20:46 GMT
தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு
திருச்சி, மார்ச்.17-
தமிழக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பொழிலன் நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்கள்முன்னணி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய பொதுவுடமைக் கட்சி, மார்க்சிய பொதுவுடமை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் ஓரளவாவது பாரதீய ஜனதா கட்சியின் பாசிச போக்குகளை எதிர்த்து வருவதால் அவற்றுக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் மாநில மொழி உரிமைகள் நசுக்கப்படுகின்றன. வேளாண் மண்டலத்தை பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை திணிக்கிறது.எட்டு வழி சாலை என்ற பெயரில் தமிழ்நாடு கனிம வளங்களை சூறையாடுகிறது. இட ஒதுக்கீட்டை ஒழித்திடும் நோக்கத்திலேயே செயல்பட்டு வருகிறது என்ற காரணங்களால் தி.மு‌.க‌.கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மக்கள் முன்னணியுடன் ஒத்த கருத்துடைய 13 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்