வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் கலந்துரையாடல்
வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் கலந்துரையாடல்
மதுரை,மார்ச்.
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டப்படிப்பு பயிலும் 4-ம் ஆண்டு மாணவர்கள் தங்கள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக, மேலூர் வட்டார வருவாய் கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளுடன் 3 மாத காலத்திற்கு தங்கி பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கிடாரிப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் சி.சிஜின் ரவி, ப.சுபாஷ், ம.தமிழ்மணி, த.தருண் ஷத்ரியா, செ.வசந்த் குமார், ரா.ராஜமேகன், ம.நித்திஷ் கண்ணா ஆகியோர் விவசாயிகள் மற்றும் வல்லுனர்களுடன் கலந்துரையாடினர்.