வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-03-16 20:41 GMT
ராஜபாளையம்,
மத்திய அரசு நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில்  ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள  வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ராஜு, ஹரிஹரன், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்