ஒதுங்கிய 2 ஆண் பிணம்

ஒதுங்கிய 2 ஆண் பிணம்

Update: 2021-03-16 20:39 GMT
காங்கேயம்
காங்கேயம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் அடுத்தடுத்து  2 ஆண் பிணம் கரை ஒதுங்கியது. போலீசார் அந்த பிணங்களை மீட்டு அவர்கள்யார்?  என்று விசாரணை செய்து வருகிறார்கள்.
ஆண் பிணம் 
காங்கேயம் அருகே செல்லும் வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கேயம் அருகே, சென்னிமலை சாலை, திட்டுப்பாறை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம்  கரை ஒதுங்கியது. இதை பார்த்ததும் அந்த பகுதி பொதுமக்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம்அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு பிணம்
இதேபோல் காங்கேயம் அருகே, பழையகோட்டை சாலை, நாட்டார்பாளையம் பிரிவு அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் 40  வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் பிணம் ஒதுங்கியது.  இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது பற்றிய தகவல் அறிந்தம் காங்கேயம் போலீசார் விரைந்து சென்று அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
மேலும் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்?  எப்படி இறந்தார்கள்? வாய்காலில் தவறி விழுந்து இறந்தார்களா? அல்லது வாய்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா?  என வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகிறார்கள். 

மேலும் செய்திகள்