வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.31 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இதுவரை ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் லட்சத்து 70 ஆயிரத்து 310 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-16 20:37 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இதுவரை ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் லட்சத்து 70 ஆயிரத்து 310 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 நடவடிக்கை 
தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
 தேர்தல் நடைமுறைகளில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
 பறிமுதல்
 இந்தவகையில் கடந்த 15-ந் தேதி வரை 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ. 30 லட்சத்து 70 ஆயிரத்து 310 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 ராஜபாளையம் தொகுதியில் ரூ. 7 லட்சத்து 44 ஆயிரத்து 20-ம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 460-ம், சாத்தூர் தொகுதியில் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 230-ம் பறிமுதல் செய்யப்பட்டது. 
விருதுநகர் 
 சிவகாசி தொகுதியில் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்து 200-ம்,  விருதுநகர் தொகுதியில்ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 500-ம், திருச்சுழி தொகுதியில் ரூ. 2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ.28 லட்சத்து20 ஆயிரத்து 310 உரிய விசாரணைக்கு பின் உரிமதாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவகாசி தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரமும், விருதுநகரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சமும் இன்னும் உரிைமதாரரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
விசாரணையில் இருந்து வருகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்