சிறுமியை கொடுமைப்படுத்திய சித்தி மீது வழக்கு பதிவு
சிறுமியை கொடுமைப்படுத்திய சித்தி மீது வழக்கு பதிவு
மதுரை,மார்ச்.
குழந்தைகள் நல வாரியக் குழு உறுப்பினர் பாண்டியராஜன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில், தாயை இழந்த ஒரு சிறுமி எஸ்.எஸ்.காலனியில் உள்ள அவளது சித்தி வீட்டில் வளர்ந்து வந்தார். அங்கு தன்னை கொடுமைப்படுத்தியதாக சிறுமி குழந்தைகள் நலவாரியத்தில் புகார் அளித்தார். அது குறித்து நாங்கள் விசாரணை நடத்தியதில் அது உண்மை என்பது தெரியவந்தது. எனவே சிறுமியின் சித்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் சிறுமியின் சித்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமியின் விருப்பத்தை தொடர்ந்து அவர் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.