மதுரை, மார்ச்.
மதுரை கீரைத்துறை, குயவர்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 75). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த 11 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.