பொள்ளாச்சி அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி அருகே ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-16 20:05 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த மண்ணூரில் துணை மாநில வரி அலுவலர் காளிரத்தினம் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் ரூ.55,500 இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பது தெரியவந்தது. 

ஆனால் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைத்தனர். 

இதே பறக்கும் படை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையான கோபாலபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலப்புரத்தை சேர்ந்த நாசர் என்பவரிடம், ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதேபோன்று வடக்கிபாளையத்தில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது அந்த வழியாக திருச்சூரை சேர்ந்த விஜிஸ் என்பவர் காரில் வந்தார். காரை சோதனை செய்ததில் அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.95 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சிறுகளந்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் ரூ.90 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்