உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.11¾ லட்சம்
உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.11¾ லட்சம்
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன்கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணிநடந்தது. இந்த பணி திருப்பூர் இந்துசமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், ஆய்வாளர் (ஊத்துக்குளி) ஆதிரை, செயல் அலுவலர் கங்காதரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் ரூ. 11 லட்சத்து 88 ஆயிரத்து 575-ம், தங்கம் 73.5 கிராம், வெள்ளி 123.5 கிராம் இருந்ததாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.