ஓட்டலில் மது விற்றவர் கைது

ஓட்டலில் மது விற்றவர் கைது

Update: 2021-03-16 19:56 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனையிட்டபோது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தளவாபாளையம் கடைவீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், கார்த்திகேயன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்