மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு

Update: 2021-03-16 19:51 GMT
குளித்தலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பாப்பாபட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 41). இவர் நேற்று காலை பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது ஊருக்கு செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் லிப்ட் கேட்டு ஏறினார். பின்னர் இருவரும் குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.  விபத்தை பார்த்ததும், அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த நல்லதம்பியை குளித்தலை அரசு மருத்துவமனைக்கும், பெயர் தெரியாத வாலிபரை திருச்சி அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த வாலிபர்  உயிரிழந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற நல்லதம்பி, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்