கடலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 286 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24 ஆயிரத்து 939 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 288 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இவர்களில், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடலூர், விருத்தாசலத்தை சேர்ந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று மட்டும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 949 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 185 பேருடைய கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வரவேண்டியுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 25 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.