கரூரில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கரூர்
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக மத்திய அரசுடன் ஊழியர் சங்கங்களின் சார்பில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டன. ஆனால், அதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. அதனைத்தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதேேபால, கரூர் மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளான நேற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். இதனால், வங்கியில் வழக்கமாக நடைபெறும் பணப் பரிமாற்றம் உள்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தீர்ந்து போனதால் வாடிக்கையாளர்கள் அங்கும், இங்குமாக அலைந்ததை காண முடிந்தது.