கிருஷ்ணகிரியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-16 18:47 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை எதிரே, அனைத்து வாகன ஓட்டுனர்கள் வாழ்வுடமை சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராயல்பாரூக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஜாகீர்உசேன், இம்ரான், மகேஷ், ரமேஷ், ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜேசுதாஸ், மாநில துணைத்தலைவர் மகேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் கோட்டைசாமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சங்க நிர்வாகிகள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். ஆர்ப்பாட்டத்தில், டிரைவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் ஏற்ப, எங்களது வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை விலைப்பட்டியல் மாற்றி அமைக்க வழிவகை செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் இயங்காமல் இருந்த ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 6 மாத கால காப்பீடு அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். 30 சதவீதம் வாடகை உயர்வை லாரி உரிமையாளர்களுக்கு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். விபத்தில் உயிரிழக்கும் ஓட்டுனர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றிமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்