வேலூர்; பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
வேலூரில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிசுதந்திரநாதன், பொருளாளர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 15 சதவீத சம்பள உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மருத்துவ செலவு மற்றும் மருத்துவ பில் தீர்வு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.