தியாகதுருகத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

தியாகதுருகத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

Update: 2021-03-16 17:16 GMT
கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே பீ.தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி(வயது 68) விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த உளுந்தை விற்பனை செய்வதற்காக தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்துவிட்டு டீ குடிப்பதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். 
அப்போது தியாகதுருகத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முத்துசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்