நிரந்தர மின் இணைப்புக்கு கட்டிட நிறைவு சான்று அவசியம் கோட்ட செயற்பொறியாளர் தகவல்
நிரந்தர மின் இணைப்புக்கு கட்டிட நிறைவு சான்று அவசியம் கோட்ட செயற்பொறியாளர் தகவல்
கள்ளக்குறிச்சி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கள்ளக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4-2-2019-க்கு பிறகு கட்டிட திட்ட ஒப்புதல் பெற்று புதிதாக கட்டப்படும் அனைத்து கடைகள், வணிகவளாகங்கள் மற்றும் 3 வீடுகளுக்கு மேல் அல்லது 12 மீ்ட்டர் உயரத்துக்கு மேல், வீட்டின் பரப்பளவு 750 சதுர மீட்டருக்கு மேல் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு உரிய விதிமுறைகள் குறித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி விண்ணப்ப படிவத்துடன் கட்டிட திட்ட ஒப்புதல் மற்றும் நிறைவு ஆகிய 2 சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்ட திட்ட அனுமதி வழங்கிய அலுவலரிடம் இருந்து பெற்று அளித்த பின்னரே நுகர்வோர்களுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும்.
இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.