நீலகிரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா
நீலகிரியில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 455 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 349 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 49 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 57 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.