நீலகியில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நீலகிரியில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக மொத்தம் ரூ.200 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2021-03-16 15:41 GMT
ஊட்டி,

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் அகில இந்திய வங்கி ஊழியர் மற்றும் அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் முன்பு வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. 

வங்கி சேவை இல்லாததால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர். ஆனால் ஏ.டி.எம். சேவை தொடர்ந்து வழங்கப்பட்டது. வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கிகளில் நடைபெறும் அரசு மற்றும் வாடிக்கையாளர்களின் அனைத்து பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது.

நீலகிரியில் 2 நாட்களில் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இதையொட்டி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூடப்பட்டு இருந்தது. கூடலூர் நகரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்