மாரியம்மன் கோவில் திருவிழா

இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் திருவிழா

Update: 2021-03-16 15:12 GMT

நிலக்கோட்டை:

நிலக்கோட்டையில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. 
இந்த கோவிலில் பங்குனி மாத உற்சவ திருவிழா கடந்த 14-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவையொட்டி நேற்று இரவு அம்மன், பத்ரகாளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இன்று(புதன்கிழமை) மீனாட்சி அலங்காரத்திலும், நாளை சரஸ்வதி அலங்காரத்திலும், 19-ந்தேதி மகாலட்சுமி அலங்காரத்திலும், 20-ந்தேதி தவழும் கிருஷ்ணன் அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

21-ந் தேதி இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் நிலக்கோட்டையின் முக்கிய வீதிகளில் வலம் வருதலும், 22-ந்தேதி அக்னிச்சட்டி, கரும்புத்தொட்டில் எடுத்து வழிபாடு செய்தலும், 23-ந்தேதி பால்குடம், மாவிளக்கு எடுத்தலும், இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதலும் நடக்கிறது. 
24-ந்தேதி அம்மன் இரவு பூப்பல்லக்கில் விடிய விடிய நகர்வலம் வருதலும், 25-ந்தேதி முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் ஊஞ்சல் உற்சவம், பூஞ்சோலை சென்றடைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 

விழாவிற்கான ஏற்பாடுகளை நிலக்கோட்டை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின் முறையின் காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலைபாண்டியன் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
---

மேலும் செய்திகள்