கடன் சுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூரில் கடன் சுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-03-16 14:25 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சசிகலா (வயது 42). சசிகலா தனது தேவைக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், பணம் வாங்கியவர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டு ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்