சிறுத்தொண்டநல்லூர் முத்துப்பேச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சிறுத்தொண்டநல்லூர் முத்துப்பேச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;
ஏரல்:
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துப்பேச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் மங்கல இசை, மகாகணபதி அனுக்ஞை, சுடலைமாடசுவாமி அனுக்ஞை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, நவகிரக ஹோமம், ஏரல் தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் யானையில் கொண்டு வந்தனர். தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரவு முதல் யாகசாலை பூஜை நடந்தது. காலையில் முத்து பேச்சி அம்மன், சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை, அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.