கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2021-03-16 12:17 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள கரிசல்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மூக்கையா மகன் செண்பகராஜ் (வயது 42). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் பசுவந்தனை ரோட்டில் சென்றபோது எதிரே செண்பகப்பேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் மாரியப்பன் வயது (42) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் செண்பகராஜை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்