கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு
கால்வாயில் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு
ஊட்டி
ஊட்டியில் மஞ்சனக்கொரை மின் மயானம் அருகே விவசாய தோட்டங்கள் உள்ளது. அதன் நடுவே கால்வாய் செல்கிறது. இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டெருமை ஒன்று, கால்வாயில் தவறி விழுந்தது.
கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்ததால் கால் மற்றும் கொம்பு சிக்கிக்கொண்டது. இதுகுறித்து ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கயிறு கட்டி காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தோட்டத்துக்குள் கிரேன் செல்ல முடியாததால், அக்கம்பக்கத்தினரை வரவழைத்து அவர்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி காட்டெருமையை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த காட்டெருமைக்கு காலில் அடிபட்டு உள்ளதால் ஏற்கனவே சிகிச்சை அளித்து அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
தற்போது மீண்டும் குடியிருப்பு பகுதியையொட்டி சுற்றித்திரிந்து வருவதால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.