ஊட்டி கோர்ட்டில் 6 பேர் ஆஜராகவில்லை

ஊட்டி கோர்ட்டில் 6 பேர் ஆஜராகவில்லை

Update: 2021-03-16 02:08 GMT
ஊட்டி

கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஊட்டி கிளை சிறையில் இருந்து சயான், மனோஜை போலீசார் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள சம்சீர்அலி, ஜித்தின்ராய் ஆகிய 2 பேர் ஆஜராகினர். 

சதீசன், திபு, சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி உள்பட 6 பேர் ஆஜராகவில்லை. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரத்திடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர். வழக்கு விசாரணை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்