மேச்சேரி:
மேச்சேரி அருகே கோனூர் திப்பம்பட்டி காட்டுவளவு வெள்ளக்கல் மடுவு பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 20). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவரும், இவருடைய நண்பர் வீரக்கல் புதூர் கருப்பு ரெட்டியூர் பகுதியை சேர்ந்த விஜயும், மோட்டார் சைக்கிளில் மேச்சேரியில் இருந்து ஓமலூர் நோக்கி சென்றனர். கோகுல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். விஜய் பின்னால் உட்கார்ந்து சென்றார்.
செங்காட்டு பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோகுல் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். விஜய் பலத்த காயங்களுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.