கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கோவை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. கோவையில் முதல் நாளில் 2 பேர் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் விடுமுறை என்பதால் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் மொத்தம் 31 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் தலா 3 பேரும், கவுண்டம்பாளையத்தில் 5 பேர், கோவை வடக்கில் 5 பேர், தொண்டாமுத்தூரில் 4 பேர், சிங்காநல்லூரில் 7 பேர்,
பொள்ளாச்சியில் ஒருவரும் என மொத்தம் 31 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். மேலும் வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
முதல் நாள் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் 2 பேரையும் சேர்த்து இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 33 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவா். இவ்வாறு அவர் கூறினார்.