தோப்பூர் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தோப்பூர் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2021-03-16 02:06 GMT
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தாமோதரஅள்ளி ஊராட்சி தோப்பூர் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். தொடர்ந்து கோவில் கோபுர கலசம் மற்றும் விநாயகர், காளியம்மன், மகாசக்தி மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்