வாணியம்பாடியில் ரூ.2½ லட்சம் நகைகள் பறிமுதல்
வாணியம்பாடியில் ரூ.2½ லட்சம் நகைகள் பறிமுதல்
வாணியம்பாடி
வாணியம்பாடி- புதூர் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது வாணியம்பாடி, காதர்பேட்டை பகுதியை சேர்ந்த முகமதுசுஹேப் என்பவர் தனது காரில் உரிய ஆவணமின்றி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட நகைகளை பறக்கும் படையினபர் கைப்பற்றி வாணியம்பாடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நகைகளை ஆய்வு செய்து வாணியம்பாடி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.