லால்குடியில் 26-ந் தேதி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது
லால்குடியில் 26-ந் தேதி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
லால்குடி, மார்ச்.16-
லால்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவில் சப்த ரிஷிகளுக்கும் முக்தி தந்த தலம் ஆகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி நேற்று காலை தேர் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. அதற்கு முன்னதாக மூலவர் சப்தரிஷீஸ்வரர் பெருந்திருப்பிராட்டியார் அம்மனிடம் இருந்து உத்தரவு பெற்று முகூர்த்தக் கால்கள் கொண்டுவரப் பட்டது. இதனையடுத்து பெரிய தேரில் ஆகம விதிகளின்படி பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் முகூர்த்தக்கால் தேரில் ஊன்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.