ஊஞ்சலூர், கிளாம்பாடி, பாசூர் பகுதிகளில் முக கவசம் அணியாத 64 பேரிடம் இருந்து ரூ.12,800 அபராதம் வசூல்

ஊஞ்சலூர், கிளாம்பாடி, பாசூர் பகுதிகளில் முக கவசம் அணியாத 64 பேரிடம் இருந்து ரூ.12,800 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Update: 2021-03-15 21:41 GMT
ஊஞ்சலூர்
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொண்டுதான் வெளியில் வரவேண்டும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி முக கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 
அதன்படி கிளாம்பாடி, ஊஞ்சலூர், பாசூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் செயல் அதிகாரிகள் சிவகாமி, பழனியப்பன், சுகாதார துறையினர், மலையம்பாளையம் போலீஸ் துறையினர் ஆகியோர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றதாக ஊஞ்லூரில் 3 பேர், கிளாம்பாடி சோளங்காபாளையத்தில் 58 பேர், பாசூரில் 3 பேர் என மொத்தம் 64 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.12 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்