சாத்தூர்,
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பெட்டிக்கடை முன்பு கையில் புகையிலை பாக்கெட்டுகளுடன் ஆரோக்கிய மேரி (வயது47) நின்று கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து 10 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.