கல்லுடைக்கும் ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
கல்லுடைக்கும் ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்லுடைக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.