அத்தை இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை

அத்தை இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-15 20:49 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் -வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே வாரச்சந்தை கொட்டகை ஒன்றில் நேற்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டவர்கள், பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (வயது 25) என்பதும், அவர் பெயிண்டராக வேலை செய்ததும் தெரியவந்தது. விக்னேசின் அத்தை செல்வி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். விக்னேசை, அவரது அத்தை தான் சிறு வயதில் இருந்து வளர்த்தாராம். இதனால் அத்தை இறந்த துக்கத்தில் இருந்த விக்னேஷ் மது போதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்