சரக்கு ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சையில் சரக்கு ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் சரக்கு ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரக்கு ஆட்டோ டிரைவர்
தஞ்சை அய்யங்கடை வீதியை சேர்ந்தவர் புருசோத்தமன். இவருடைய மகன் கார்த்திக் (வயது32). இவர் தஞ்சையில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
இந்த நிலையில் கார்த்திக்கிற்கும், தஞ்சை வடக்கு வீதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று கார்த்திக், அந்த பெண்ணின் வீட்டில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இது குறித்து தஞ்சை நகர மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.