ஈரோட்டில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் விபசாரம் நடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2021-03-15 20:33 GMT
ஈரோடு
ஈரோடு திண்டல் தெற்குபள்ளம் பகுதியில் விபசாரம் நடப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 41), ஈரோடு அருகே தாமரைபாளையத்தை சேர்ந்த கதிர்வேலின் மனைவி விஜயலட்சுமி (37) ஆகியோர் 29 வயது பெண்ணை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணையும் போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்