வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி
வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி;
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) வெள்ளைச்சாமி தலைமையில், மேலாளர் முத்துராமன், முன்னிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் அலமேலு, முன்னிலையில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் உள்பட ஊர் பொதுமக்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.