ஓய்வுபெற்ற காவலர்கள் சந்திப்பு
கல்லிடைக்குறிச்சியில் ஓய்வுபெற்ற காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.;
அம்பை, மார்ச்:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் 7-ம் அணியில் 1981-ம் ஆண்டு பயிற்சி முடித்த காவல் நண்பர்கள் ஒன்றிணைந்து காக்கி இதயங்களின் சங்கமம் விழா எனும் சந்திப்பு நிகழ்ச்சியை கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடத்தினர். லட்சுமி சாமிநாதன் வரவேற்றார். ஓய்வுபெற்ற துணை தளவாய் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன், உலக திருக்குறள் தகவல் மையத்தை சேர்ந்த வளன் அரசு, தமிழ்நாடு சிறப்பு காவலர் 12-ம் அணி கமாடண்ட் கார்த்திகேயன், தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ம் அணி கமாடண்ட் ஏசு சந்திரபோஸ், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற எஸ்.பி.சி.ஐ.டி. ஜவஹர், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தன், முருகன், சுடலை ஆகியோர் செய்திருந்தனர். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஷான்ராஜா நன்றி கூறினார்.